SRI VIDHYA DHANA GANAPATHY TEMPLE
SRI VIDHYA DHANA GANAPATHY TEMPLE
  • Home
  • About Us
  • Inside Us
  • Donate Us
  • Calender
  • Contact Us
  • More
    • Home
    • About Us
    • Inside Us
    • Donate Us
    • Calender
    • Contact Us

  • Home
  • About Us
  • Inside Us
  • Donate Us
  • Calender
  • Contact Us

About Us

 

  • 1980 மே மாதம் 5 ஆம் தேதி ஸ்ரீவித்யாதன கணபதி திருக்கோவில் ஆசிரியர் காலனி சான்றோர் பெருமக்களால் நிறுவப்பட்டு சிரவணபுரம் கெளமார மடாலயம் தவத்திரு.சுந்தர சுவாமிகளால் திருக்குட நன்னீராட்டு நடத்தப்பட்டது.


  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எண்வகை மருந்து சார்த்தி திருக்குட நன்னீராட்டு வழிபாடு 1992ஆம் ஆண்டு நடைபெற்றது.


  • 1996ஆம் ஆண்டு ஸ்ரீவித்யாதன கணபதி திருக்கோவில் சுற்றுப்பிரகாரத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அருள்மிகு லிங்கோற்பவர், அருள்மிகு விஷ்ணுதுர்க்கை மற்றும் அருள்மிகு நவகோள் பிரதிஷ்டை செய்து 1.09.1996 அன்று திருக்குட நன்னீராட்டு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.


  • 12 ஆண்டுகளுக்கு பிறகு 2008ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய திருக்குட நன்னீராட்டு 2009 ஆம் ஆண்டு கூடுதல் சன்னிதானங்ளோடு நடத்தும் வகையில் நவம்பர் மாதம் பூமி பூஜை நடத்தி அருள்மிகு சுந்தரேசுவரர்உடனுறை மீனாட்சியம்மை , அருள்மிகு பாலகுமாரன், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சத்யநாராயணன் ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை தனி சன்னதி, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் நிறுவப்பட்டு 2010ஆம் ஆண்டு மே மாதம் 25ந்தேதி மிகச்சிறப்பாக திருக்குட நன்னீராட்டு வழிபாடு பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனக்கர்த்தர் இளையப்பட்டம் தவத்திரு.சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிரவணபுரம் கெளமார மடாலயம் ஆதினகர்த்தர் தவத்திரு.குமரகுரு அடிகளார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


  • தற்போது 2022ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய திருக்குட முழுக்கு வழிபாடு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம்(தை மாதம்) குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பாலாலய வழிபாடு அக்டோபர் மாதம் (2.10.2023) திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.


  • நம் கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை, சத்தியநாரயணப் பெருமாள், அருள்மிகு பான சுந்தரேசுவரர் உடனுறை மீனாட்சி, அருள்மிகு பாலகுமாரன், மூலமூர்த்தி ஸ்ரீவித்யாதனகணபதி இறைவனுடன் புதிதாக அருள்மிகு ஸ்ரீவித்யாதன ஆஞ்சநேயர் மற்றும் அருள்மிகு காலபைரவர் பிரதிஷ்டை செய்து சோபகிருது வருடம் தைத்திங்கள் 7 ஆம் நாள் (21.01.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தொலையாச் செல்வர் வழிபாட்டுக்குழு சைவநெறி காவலர் சிவத்திரு.ராமு, சைவநெறி காவலர் சிவத்திரு.பச்சையப்பன், சைவநெறி காவலர் சிவத்திரு.செந்தில்குமார் ஆகியோரின் வேள்விப் பணியுடன் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்புடன் நடைபெற்றது.

Copyright © 2025 SRI VIDHYA DHANA GANAPATHY TEMPLE - All Rights Reserved.

  • Home
  • About Us
  • Inside Us
  • Donate Us
  • Calender
  • Contact Us

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept